Tuesday, October 18, 2011

2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்து இக்கவிதைகள்


இந்தியனாய் இரு !! ??

இந்தியனாய் இரு

தமிழனாய் இருந்தால்

தீவிரவாதம்

இந்தியனாய் இரு


காஷ்மீரின்

பிடி நிலமும்

இந்தியாவை விட்டுப்

போகாதிருக்க

நிதி கொடு



நம்

கச்சத் தீவை

சிங்கள்வனுக்குத்

தரும்மாய்த் தர

சம்மதமாய் இரு
 

இரு

இந்தியனாய் இரு



ஆங்கிலேயன்

அடிமை செய்தான்

ஆங்கிலம் கற்றாய்



இந்தியனாய்

இருப்பதால்

இந்தி கற்பாய்



வரி கொடு

இந்தியும்

சமஸ்கிருதமும்

அரசு வளர்க்க

நிதி கொடு



இரு

இந்தியனாய் இரு


சிங்களவன்

நித்தம்

நம் மீனவரைச்

சுட்டுப் போடட்டும்

அங்கிருக்கும்

இந்தியக் கப்பற்படை

அதைப் பார்த்து நிற்க

கொடு

வரி கொடு


இரு

இந்தியனாய் இரு



காவிரியில்

பங்கீட?

கேரளத்துத்

தண்ணீரா?

எதற்கு உனக்கு

அது?

கொடு

மின்சாரம் கொடு

கர்நாடகாவுக்குக் கொடு



வட எல்லையில்

சாக

உன் பிள்ளையைக்

கொடு



இரு

இந்தியனாய் இரு



யாரும்

இங்கு

குடியேற

நிலம் கொடு

வணிகம் செய்ய

துணை இரு



பிழைப்பு தேட

வேறிடம்

உனக்கெதற்கு?

உதைத்து

விரட்டுவார்

வேறு மாநிலத்தில்

இரு தமிழகத்தில்

இரு

இந்தியனாய் இரு !!!???
(2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்து இக்கவிதை)




அந்த ஒரு நாள்

மாண்டு போவேன்

நானும்

இன்றோ

நாளையோ

என்றோ

ஒரு நாள்



அன்று

கட்டி அணைத்து அழ

கண்ணீர் சிந்திப்போக

ஊரும் உறவும்

ஓடிவரு,



விடுங்கள் அவர்களை

என்னோடு

எல்லோரும் இருக்கும்

கடைசி நேரம் அது.



அன்பாய் என்னோடு

இருந்தவர்கள் எல்லோரும்

கடைசியாய் என்னோடு

இருக்கட்டும்



எல்லோரும் இருந்து

எல்லோரும் கூடி

கடைசியாய்

ஒன்று செய்வீர்



மாண்ட பின்பாவது

என்னை

அவளிடம் இருந்து

மீட்டுவிடுங்கள்



முதல் உரிமை சொல்லி

அவள்

என் பக்கம் வராமல்

பார்த்துக் கொள்ளுங்கள்

சாவாவது

ஒரு நாள்

என்னை

அமைதியாய் வைக்கட்டும்



அவள் விரல் நுனிகூட

என் உடல் மீது

படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்



அழுகுரல்

கேட்கும் தூரம் தாண்டி

முடிந்தால் ஊர்தாண்டி

அவளை வையுங்கள்



அவளைத் தொட்ட

காற்று கூட

என்னைத் தொடாமல்

அந்த ஒரு நாளாவது

பார்த்துக் கொள்ளுங்கள்



நான்

கடைசியாய் உறங்கும்

அந்த ஒரு நாளில்

நீங்கள் எல்லோரும்

என்னுடன் இருங்கள்.

 ( 2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்து இக்கவிதை)



கற்பணை மனைவி

சிந்திக்கும் போதே

உனைச்

சந்திப்பதுபோல்

ஒரு சுகம்



சிந்தனை

ஒன்றாகி

சந்தேகமில்லா

மனச்

சங்கமம்

அல்லவா

சுகம்



கற்பனைதான்

நீ என்றாலும்

உன் மேல்

காதல் கொள்வது

சுகம்



நான் பேசுவதை

நீ கேட்பதும்

அதை நல்ல

கவிதையென்று

நீ சொல்வதும்

சுமம்



முட்கள் வைத்து

சொற்கள் சொல்லாது

மனதை மறைக்கும்

மொழியறியாது

நீ

கதைப்பதெல்லாம்

சுகம்



எழுதிநான் முடிப்பதற்குள்

இரவுகள் பாதி

முடியும் என்று

உறங்க நீ

போகும் முன்

வலி முடியாமல்

தவிக்குமென் முதுகில்



இதமாக மருந்தினைத்

தேய்த்து

நோகாமல்

நான் எழுத

உன் தமிழ்ப் பணி

சுகம்



இலக்கியம் படித்து

அதை

உன்னிடம்

கதைப்பது சுமம்



தொல்லக்காட்சி

தொலைக்காட்சி

எல்லைத்தண்டி

உன்னை ஆட்கொள்ளாமல்

என்னுடன் நீ

கலப்பது

சுமம்



சக்கரை வியாதியின்

சிக்கல் தவிர்க்க

நாளும் நான் நடக்க

கால்கள் கடுக்க

வாரம் ஒரு நாள்

வஞ்சையாய்

என் பாதம் முதல்

தொடை வரை

நீ பிடிப்பது சுகம்



பிடித்துவிட்ட

கைகளையும்

சமைக்க

நிற்கும்

உன் கால்களையும்

நான் பிடிப்பது

சுகம் சுகம்



உணவே மருந்தாய்

மருந்தே உணவாய்

நீ சமைப்பது

சுகம்



அறம் செய்யும்

வள்ளுவர் சொன்ன

இல்லறம் நாம்

காண்பது சுகம் ......

கனவுகள்

வெறும் கவிதையாகி

கவிதைகளில் மட்டும்

வாழ்வதா சுகம்.

(2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்துஇக்கவிதை)


அந்தக் காதல் கவிதைகள்

அன்று

பூத்த உணர்வுகள்

கோர்த்த மாலை

சருகாகி

மண்ணோடு

மண்ணாகி

இன்னொரு

கொடி துளிர்த்தது

வளர்ந்தது


இது

என்னுயிக் கொடி

என்னோடு

படர்ந்து

பிணைந்து

பூத்து

காய்த்து....

நாங்கள்

ஒரு

பூந்தோப்பு


அன்று பூத்துச்

சருகாகிப் போன போது

பதிவாக்கிப்போன

கவிதைகள்

இன்று

கிழித்தெறியப்

போகும் போது


மனம்

கிழிந்து விட்டது போல்

வலித்து விட்டது


இது

என் கவிதைகள்


இதுவும் என்ன

இராசீவ் காந்தி

கொலை வழக்கா?


அப்பாவி

என் கவிதைகளுக்கு

மரண தண்டனை

கூடாது

எனக்கு

நவனிதம் போல்

நீதிக்காக்கத்

தெரியாது என்பதால்

இக்கவிதைகளை

வாழ விட்டேன்.


(2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்துஇக்கவிதை)

No comments:

Post a Comment